Sudharshini / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கொலியா, ரொக்வூட் தோட்டத்தில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், இருவர்; காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்வையிடுவதற்காக முச்சக்கர வண்டியின் சாரதி இன்று அதிகாலை மஸ்கெலியா நோக்கி வந்துள்ளதாகவும் இதன்போது வீதியிலுள்ள வளைவில் வைத்து முச்சக்கர வண்டி தடம்புரண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
முச்சக்கர வண்டியின் சாரதி, சாரதி அனுமதிபத்திரமின்றி வண்டியை செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026