2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், ஆர்.கோகுலன்

உடப்புசல்லாவை, மடுல்ல ரப்பானf;  தோட்ட சந்திக்கு அருகிலுள்ள பாலமொன்றில், முச்சக்கரவண்யொன்று செவ்வாய்க்கிழமை இரவு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்விபத்தில், ரப்பானக்  தோட்டத்தை சேர்ந்த ஸ்ரீநெத்தி முதியன்சலாகே அபேசிங்க (வயது 61) என்பவரே,  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த  61, 56 வயதுடைய இருவரும், டெல்மார் பிரதேச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி, மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளதாகவும் இவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X