Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தினை ஜே.வி.பியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக ஜே.வி.பி இன்று (7) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) காலை 10 மணியளவில் ஹட்டன் நகரில் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.எம் பிரேமரத்தின இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2 வருடம் ஒப்பந்தக்காலம் என்ற ரீதியிலேயே புதிய சம்பள ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது 2017 ஏப்ரல் மாதம் புதிய சம்பள திட்டமொன்றை கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு கடைசியில் 19 மாதங்களின் பின்னர் புதிய சம்பள திட்டம் ஒன்றிற்காக, ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதிய ஒப்பந்தம் என்ற சரத்து வலுவற்றுப் போயுள்ளது
இதனால் 2019 ஆம் ஆண்டுவரை தற்போதுள்ள சம்பளத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது.
ஆதலால்,இம்மாத இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டம் ஒன்றிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.எம் பிரேமரத்தின அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago