Editorial / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலவன் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு இளம் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்பு பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குறித்து பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு விஷேட கவனம் செலுத்தி மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தினசரி துஷ்பிரயோகம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
13 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago