Janu / 2026 மே 07 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - போடைஸ் வீதியில் பேருந்துகள் முறையான நேர அட்டவணைப்படி இயங்காமை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகள் செலுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை (07) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இவ்வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இரண்டு உயிர்கள் பலியானதை தொடர்ந்து, இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததோடு, மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தனர்.
மேலும், பேருந்துகள் சரியான நேரத்திற்குச் சேவையில் ஈடுபடாத காரணத்தினால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நாளாந்தக் கடமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டகாரர்களின் முக்கிய கோரிக்கைகள்,
இந்தச் சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, பாதுகாப்புடன் கூடிய சீரான போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
சுதத் எச்.எம். ஹேவா


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .