R.Maheshwary / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கான தட்டுபாடு தொடர்ந்து காணப்படுவதால், இன்றும் பலர் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இன்றாவது தமக்கான எரிபொருள் கிடைக்குமா என எதிர்பார்ப்பில், இன்று அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.
ஹட்டனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று (17) போதியளவு எரிபொருள் தொகை கிடைத்துள்ள நிலையில், எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்குமாறு, எரிபொருள் கூட்டுதாபனம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் எரிபொருள் நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மீண்டும் எத்தனை நாட்களுக்குப் பிறகு தமது எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்பது தமக்கே தெரியாதென்றும் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026