Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் தாம் எரிபொருளை ஓர்டர் செய்யவில்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனில் உள்ள சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (31) பெற்றோல் தட்டுப்பாடு நிலவியதால், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கையிருப்பில் உள்ள 95 ஒக்டேன் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் வினவியபோது, எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்ததால் எரிபொருள் பெறுவதற்கான உத்தரவை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago