2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஹட்டனில் தீர்க்கப்பட்ட குப்பைப் பிரச்சினை பத்தனையில் ஆரம்பம்

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த 17 நாட்களாக எடுக்கப்படாத குப்பைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதனை  தொடர்ந்து அவ்விடத்துக்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பகுதியில், ஹட்டன் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று  ஹட்டனில் உள்ள சகல குப்பைகளும் அகற்றுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து,  நான்கு உழவு இயந்திர குப்பைகள் பத்தனை பகுதிக்கு கொண்டு சென்ற போது பத்தனை பிரதேச மக்கள் வீதியை மறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஹட்டனில் தீர்க்கப்பட்ட குப்பை பிரச்சினை பத்தனையில் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து இரண்டு உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஹட்டனில் இந்து கொண்டு வந்த குப்பைகளை மாத்திரம் கொட்டுவதற்கு இடமளிக்குமாறு கேட்டுகொண்டபோதும், அவர்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த குப்பை பிரச்சினை தொடர்பாக பத்தனை மக்களுடன் கலந்துரையாடி தீர்த்து கொள்ளுமாறு, பொலிஸார் தெரிவித்ததையடுத்து, அங்கிருந்து குப்பை டிரக்டர்கள் கொண்டு செல்லப்பட்டன.

எனினும், நாளை காலை இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என, பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .