2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹட்டனில் மாணவனுக்கு தொற்று; 53 பேர் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நரிலுள்ள பிரபல பாடசலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எல்.மெதவெல்ல தெரிவித்தார். 

தரம் 10இல் கல்வி பயிலும் ஹட்டன் நகரப் பகுதியைச் சேர்ந்த மாணவனுகே, இன்று (15)  தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை கொழும்பிலிருந்து வந்த நிலையில், கினிகத்தேனை கலுகல சோதனைச்சாவடியில் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலே மேற்படி மாணவனுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவன், 7,8 ஆம் திகதிகளில் பாடலைசைக்குச் சென்றுள்ளார் என்று தெரியவருகிறது.

இந்நிலையில் மாணவனுடன் தொடர்பைப் பேணிய சக மாணவர்கள், ஆசிரியர்கள்  உள்ளடங்களாக 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X