2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

ஹட்டனில் மில்லியன் ரூபாய் செலவில் 2019இல் அபிவிருத்திகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்குட்படட பல பகுதிகளில், சுமார் 10.3 மில்லியன் ரூபாய் செலவில், 2019ஆம் ஆண்டில் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, நகரபி​தா எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹட்டன், மல்லியப்பூ சந்தி முதல் அஜந்தா பாலம் வரையான புகையிதப் பாதையை அண்மித்த பிரதான போக்குவரத்துப் பாதையை துப்பரவு செய்து பூங்கன்றுகள் நடுதல், டிக்கோயா ஆறு அகலமாக்கப்படுதல், விளையாட்டு மைதானம் அமைக்கப்படுதல், வடிகான்கள், நடைபாதை செப்பனிடப்படுதல், அஜந்தா விருந்தகத்துக்கு அருகிலுள்ள ஆறு அகலமாக்கப்பட்டு, கால்வாய், பாதுகாப்பு சுவர் ​அமைக்கப்படுதல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .