Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஹட்டன், இராகலை உள்ளிட்ட நகரங்களில், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள், இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி ஹட்டன், டிக்கோயா நகரப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான பஸ்தரிப்பு நிலையங்கள், வீதியின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகள், பிரதான வீதிகள், நடைபாதைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஹட்டன் நகரசபையின் சுகாதார பிரிவு, இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதேவேளை, இராகலை பிரதேச பொது சுகாதார பிரிவு அதிகாரி பி.ஸ்ரீதரன், பொது அமைப்புகள், இராகலை பொலிஸாரின் உதவியுடன், இராகலை நகரில் பொதுஇடங்கள் அனைத்தையும் சுத்திகரிக்கும் நடவடிக்கைகள், இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.
பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் பொதுஇடங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டதுடன், டெங்கு ஒழிப்புக்கான புகையும் விசிறப்பட்டது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .