R.Maheshwary / 2022 மார்ச் 29 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு வாரத்துக்கு இணைவாக, ஹட்டன்- டிக்கோயா நகர சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் இணைந்து நேற்று (28) ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை அழிக்க சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்ததுடன், இந்த சோதனை நடவடிக்கையின் போது, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்க எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026