Editorial / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் மல்லியப்பு பகுதியில் கடந்த 21ஆம் திகதி விபத்துக்குள்ளான நிலையில், குறித்த பஸ் இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில், பஸ் சாரதியின் கதவு பூட்டு பழுதடைந்ததால், திடீரென கதவு திறந்ததால், சாரதி இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய பிரதான மோட்டார் வாகன பரிசோதகரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பஸ் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் இருக்கைகள் தரமான முறையில் அமைக்கப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தரமற்ற நிலையில் இருந்த பஸ்ஸை இயக்க அனுமதித்த பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர். R
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago