2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் மனோகரனை காணவில்லை

Editorial   / 2024 நவம்பர் 06 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஹட்டன், ஸ்டெதன் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 65 வயதான பி.மனோகரன், டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும்போது  இரண்டு சந்தர்ப்பங்களில் இவர்  தடுக்கப்பட்டிருக்கின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடைசியாக இவர் நீல நிற சட்டையும் நீல நிற சாரமும் அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது நோர்வூட் பொலிஸ் நிலை யத்துக்கு தகவல் கொடுக்கமாறு கேட்டுகப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாவிடின் அவரது மகனின் அலைபேசி இலக்கமான 0773399752 என்ற இலக்கத்துக்கு தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X