R.Maheshwary / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பித்துள்ள நிலையில், சிவனொளிபாதமலை செல்வதற்காக, ரயில் மூலம் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வருகைத் தருபவர்கள், ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வு அறைகள் மூடப்பட்டுள்ளதால், யாத்திரிகர்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் பெருமளவானோர் சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதற்காக ஹட்டன் ரயில் நிலையத்தை வந்தடையும் நிலையில், ஹட்டன் ரயில் நிலையத்தினால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையத்துக்கு அண்மித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறை பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதாக யாத்திரிகர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் ரயில் நிலைய அதிபர் எம். தேவதாஸ், குறித்த ஓய்வு அறைகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அது நிறைவடையாமல், அந்த அறைகளை திறப்பது சிரமம் என தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், ரயில் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் ரயில் திணைக்களத்தின் பராமரிப்பு பிரிவினர், இந்த ஓய்வு அறைகளின் திருத்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .