2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு; சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று (08) காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி உயிரிழந்த நபர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று சந்தேகம் கொண்ட பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேற்படி நபரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஹட்டன் அலுத்கம பகுதியைச் சேர்ந்த பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) எனவும் இவர், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், ஹட்டன் காமினிபுரப் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .