2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமசந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ். சதீஸ்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலமொன்றை, ஹட்டன் பொலிஸார், இன்று (08) காலை மீட்டுள்ளனர்.

பஸ் நிலையத்திலிருந்த சடலத்தை, நபரொருவர் கண்டு, பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஹட்டன் அலுத்கம பகுதியைச் சேர்ந்த பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) எனவும் அவர், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்தவர், ஹட்டன் நகரின் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம், குறித்த பஸ் நிலையத்தின் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இவர், சிலரால் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு எதும் காரணங்கள் உள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .