Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், அரநாயக்க, சமாகம பிரதேசத்தில் வைத்து, நேற்று (13), ஒருவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து, 8 கிராமும் 400 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரேய்னையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை, ஹெரோய்னுடன் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago