2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் கலகெதரவில் ஒருவர் கைது

R.Maheshwary   / 2023 ஜனவரி 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி விசேட பொலிஸ் குழுவினரால் கண்டி- கலகெதர பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 26 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டி உதவி பொலிஸ் அதிகாரி சமன் அங்கமனலவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, கலகெதர பிரதேசத்திலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, அங்கு 26 கிராம் ​ஹெரோய்ன் மீட்கப்பட்டது.

அத்துடன் சந்தேகநபர் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அலைபேசிகள் 7, வங்கி அட்டைகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் அலதெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .