சுஜிதா / 2020 மார்ச் 28 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹேமசந்திரா மாவத்தைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு, நேற்று (27) இரவு, இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ பரவல் காரணமாக, சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியது என்றும் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் முயற்சியின்போது, குறித்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ பரவல் தொடர்பாக, நுவரெலியா, ஹட்டன் உள்ளூராட்சி நிறுவனங்களின் தீயணைப்புப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னரே, சம்பவ இடத்துக்கு வருகை தந்த தலவாக்கலை பொலிஸார், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றத.
இதேவேளை, இந்தத் தீ வைப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், இரண்டு இளைஞர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago