2025 மே 19, திங்கட்கிழமை

ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளம் 22 குடும்பங்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எம்.பிரபா

 வட்டவளை- ஹைட்ரி தோட்டத்தில் நேற்று முன்தினம்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 22 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

மகாவலி கங்கைக்கு நீரை விநியோகிக்கும் ஹைட்ரி ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகவே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதமும் குறித்த தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 22 வீடுகளுக்குள் இன்று மீண்டும் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த 22 வீடுகளில் குடியிருந்த 80 பேர் தற்காலிகமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் பஸ்பாகே பிரதேசம் செயலகம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்படுவதாக அப்பகுதிக்கான கிராம உத்தயோகத்தர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X