Editorial / 2020 மே 05 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைபோரஸ்ட் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அரிசி, பாவனைக்குதவாத வகையில் இருப்பதாக, தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த தோட்ட மக்களுக்கு, 3,000 ரூபாய் பெருமதியான பொருள்களை வழங்கி, அந்தத் தொகையை, மாதச் சம்பளத்தில் அறவிடும்படியான நடைமுறையை, தோட்ட நிர்வாகம் கொண்டு வந்திருந்த நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட பொருள்களில் இருந்த அரசி, பாவனைக்குதவாத வகையில் இருப்பதாக தெரிவிககப்பட்டுள்ளது.
தோட்ட மக்கள், எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள் என்ற எண்ணத்திலேயே இந்த அரிசியை வழங்கியுள்ளனர் என்றும் ஒரு சிலர் அந்த அரிசியை, மீண்டும் தோட்ட நிர்வாகத்துக்கே வழங்கிய போதிலும் சிலர் அந்த அரிசியையே சோறு சமைத்து உட்கொள்வதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், அழுகும் தருவாயில் உள்ள வெங்காயம், பழைய கடலை, உபயோகிக் முடியாத தேய்காய் எண்ணெய் ஆகியவற்ற வழங்கியுள்ளனர் என்றும் எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago