Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 128ஆவது ஆண்டு ஸ்தாபகர் தினம், நாளை (29) காலை 9.30 மணிக்கு, பாடசாலை மட்டத்தில் அதிபர் ஆர். ஸ்ரீதர் தலைமையில், அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சிவ. இராஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது, கொவிட் - 19 காரணமாக, 105 நாள்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியைப் போக்கும் வகையில், கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, அவர் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொவிட் - 19 நெருக்கடி நிலை காரணமாக, ஸ்தாபகர் தினத்துடன் கூடிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவை நடத்தமுடியாமல் போனதாக, பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago