R.Maheshwary / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
வார நாள்களில் வரவுள்ள நீண்ட விடுமுறையுடன், நுவரெலியா நகரிலுள்ள சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் தங்குவதற்காக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் செய்யப்பட்ட முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால், விடுதிகளில் தங்குவதற்கு செய்யப்பட்ட முன்பதிவுகள், சுற்றுலாப் பயணிகளால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகரத்துக்கு வருகைத் தந்துள்ளதுடன், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .