Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'அரசாங்கம் என்ன செய்கின்றது என பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள். அரசாங்கம் பல அபிவிருத்தித் திட்டங்களை, திட்டமிட்ட அடிப்படையில் ஆரம்பித்து, நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவற்றின் பெறுபேறுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன' என்று, கல்லி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“அரசாங்கத்தில் எந்த ஒரு விடயத்தையும் உடனடியாக ஒரே இரவில் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கென ஒருமுறை இருக்கின்றது. அதனை பின்பற்ற வேண்டும். ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, பல இடங்களிலும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக கடந்த அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாகவே, தற்போது பலர் பல இடங்களுக்குச் சென்று வாக்குமூலம் வழங்குகின்றார்கள். ஒரு சிலர் நீதிமன்றங்களுக்கும் செல்கின்றார்கள்” என்றும் அவர் கூறினார்.
இ-பெஸ்ட் கல்வியகத்தின் ஹட்டன் கிளையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 1,000 புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், மூன்று மாத கால பயிற்சியை நெறியை, வெற்றிகரமாக நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில், இன்று(10) நடைபெற்றது.
இ-பெஸ்ட் கல்வியகத்தின் பணிப்பாளர் பி.எம்.மொஹமட் ஜவூபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
'ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு, மேலதிகக் கொடுப்பனவாக, 4,000 ரூபாய் வழங்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவை பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து, அதற்கான அனுமதியை தற்பொழுது பெற்றுக் கொண்டுள்ளார். எனவே, எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு, 4,000 ரூபாய் கொடுப்பனவுடன் இணைந்ததாக 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
ஆசிரியர் உதவியாளர்களை உள்வாங்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, நாம் அதனை கூறிக் கொண்டு காலம் தாழ்த்த முடியாது. அதற்கு ஏற்ற வகையில் தற்பொழுது பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
'க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள், மலையகத்தில் குறிப்பிடக்கூடிய அளவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. அதற்காக முழுமுயற்சியுடன் பாடுபட்ட கல்வி திணைக்களங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் என அனைத்து தரப்பினருக்கும், எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனாலும் நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களை போலவே குறைவான சித்திகளை பெற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்துவதற்கு பாடசாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago