2025 ஜூலை 07, திங்கட்கிழமை

3,000 கிலோ கிராம் தூளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்ட 3,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையை தவுலகலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பட்டுப்பிட்டிய பகுதியில் வைத்து விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றி தவுலகல பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

வெலம்பொடை லீனகஹவத்தை பகுதியை சேர்ந்த  ஒருவருக்கு சொந்தமான தேயிலை தூளே இவ்வாறு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

தலா 60 கிலோ கிராம் கொண்ட 50 பொதிகளை லொறியிலிருந்து மீட்டுள்ளதாகவும் குறித்த லொரியின் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உடுநுவரை வலய தேயிலைச் சங்கத்தின் செயலாளர் எம்.சபான் இது பற்றித் தெரிவிக்கையில், இது விற்பனை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டவை அல்ல. கழிவுத் தேயிலையில் இருந்து நல்ல தேயிலையை தரம் பிரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கே எடுத்துச்செல்லப்பட்டன.  

கைப்பற்றியுள்ள தேயிலை தூளை ஆராய்ச்சி சபைக்கு இதனை அனுப்பி அறிக்கை பெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .