2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தேக்கு பலகைகளுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

குருநாகல்;, கெப்பபெடிகலயிலிருந்து கண்டி, அங்கும்புரை பிரதேசத்துக்கு சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு பலகைகளை சட்ட விரோதமான முறையில் கொண்டு சென்ற இருவரை, புதன்கிழமை (11) மாலை கைது செய்துள்ளதாக அங்கும்புரை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கும்புரை உடகம பிரதேசத்தில் வைத்து லொறியொன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். குறித்த லொறியில் 146 பலகைகளைக் கொண்டு செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், அதில் 251 தேக்கு பலகைகளை கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த லொறியைக் கைப்பற்றிய பொலிஸார், லொறியின் சாரதி மற்றும் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .