2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'தொழிலாளர்களுக்கு அநீதிகள் தாராளமாக இழைக்கப்படுகின்றன'

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்  

'தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்காக முற்பணம் வாங்கிய வரலாறுதான் மலையகத்தில் இருந்து வந்தது.  வரலாற்றில் முதற்தடவையாக 3500 ரூபாய், தீபாவளி பிற்பணத்துக்கும் காத்து நிற்க வேண்டிய நிலைக்கு தோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகாஜ் தெரிவித்தார்.

நோர்வூட் சென் ஜோன் டிலரி மேற்பிரிவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் மலையக மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதிகள் தாராளமாக இழைக்கப்படுகின்றன. அரசாங்கம் பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறதே தவிர அங்கு வேலை செய்த தொழிலாளர்களை அல்ல.

தற்போதும் தோட்டக் காணிகளும் அதன் உடைமைகளும் அரசாங்கத்தின் சொத்தாகும். எனவே பெருந்தோட்ட கம்பனிகளுக்கு தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துவதற்கு எவ்விதமான உரிமையும் கிடையாது.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு அரசாங்கமே முழு பொறுப்பாகும். பெருந்தோட்ட கம்பனிகளிடம் பணப்பற்றாக்குறை காரணமாக தீபாவளி முற்பணத்தை அதிகரித்து வழங்க முடியவில்லை எனவும் அதற்காக அரசாங்க திரைசேரியில் இருந்து பணத்தை கடனாகபெற்று வழங்கவுள்ளதாக மலையக அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் தொழிலாளர்களிடமிருந்து மீண்டும் அறவிட்டு கொள்ளும் கடனுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை ஏன் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு காட்ட முடியாது?. பிரதமர் மூலமாக திரைசேரியுடன் பேசி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியங்களையோ நீண்டகால கடன்களையோ வழங்கி தோட்ட தொழிலாளர்;களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது?

அதைவிட நாட்டு மக்கள் மீது குறிப்பாக தோட்ட தொழிலாளர் மீது அரசாங்கததுக்கு கரிசனை இருந்தால் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பெற்ற குத்தகை பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தலாமே?

மலையக அமைச்சர்கள் பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களையும் பெருந்தோட்ட கம்பனிகள் கட்டவிழ்த்துவிடும் கதைகளையும் காரணம் காட்டி தமது கையாளாகாத தனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கடந்த தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும்  தற்போதைய அமைச்சர்கள் சொன்ன வாக்குறுதிகளையும், நடந்துகொண்ட விதத்தையும் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களில் வெளியான செய்திகளை மீட்டுப்பார்த்தால் மக்களுக்கு பொய் கூறியவர்கள் யார் என புரியும். மலையக மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளை  பெற்றுக் கொண்டவர்கள், தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு பதிலளித்தே ஆக வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .