Kogilavani / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மத்திய அரசாங்கத்தினால், ஊவா மாகாணம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.
“கடந்த பொது தேர்தலின்போது, மாகாண அரச மருத்துவமனைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கூறப்பட்டபோதிலும் இதுவரை, ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை” எனவும் அவர் கூறினார்.
ஊவா மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாகுறை தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினர்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“எமது மாகாணத்துக்கென 50 தாதியர்கள் நியமிக்கப்படும்போது, கடமையில் இருக்கும் 50பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். அதேபோன்று, மூன்று வைத்தியர்கள் நிமிக்கப்பட்டால் கடமையில் இருக்கும் பத்து வைத்தியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுகின்றனர்.
ஒரு சில வைத்தியர்கள், தமது பிள்ளைகளுக்கு, தரமான பாடசாலைகளைக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது எமக்கு பெரும் பிரச்சினையாகவுள்ளது.
வைத்தியர்களின் பிள்ளைகள் பெரியவர்களாகியதும் உயர்கல்விக்காக கொழும்புக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். எப்படியாவது, அம்முயற்சியை அவர்கள் நிறைவேற்றிகொள்கின்றனர். தற்போதைய நிலையில் மடுல்சீமை, மகாதோவ ஆகிய வைத்தியசாலைகள் வைத்தியரின்மையால் மூடப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசாங்கத்தினால் ஊவா மாகாணம் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .