2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'முடி' திருடன் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 26 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்த திருடன், அவ்வீட்டில் தனித்திருந்த 13வயது சிறுமியை கண்டு அச்சமடைந்து, அச்சிறுமியின் முடியை வெட்டி வீசிய சம்பவமொன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து முடியை வெட்டி வீசியதாக கூறப்படும் இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி-பலாங்கொடை, ரன்மலபின்ன பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(25) இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் யாருமே இல்லையென நினைத்த இளைஞன், திருடும் நோக்கில் அவ்வீட்டுக்குள் மிகவும் இரகசியமாக புகுந்துள்ளான். அவன், வீட்டுக்குள் புகுந்த சந்தர்ப்பத்தில் அங்கு 13வயதான சிறுமி மட்டுமே இருந்துள்ளார்.

திகைத்துபோன திருடன், என்ன செய்வதென்று அறியாமல், அச்சமடைந்துள்ளார். சற்று தன்னை சுதாகரித்துகொண்ட திருடன், அச்சிறுமியை பயமுறுத்தும் வகையில் தான் கொண்டுவந்திருந்த கத்தியினால் அச்சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளார்.

இந்நிலையில், வெளியில் சென்றிருந்த தனது தந்தை வீட்டுக்கு திரும்பியவுடன் தனக்கு நேர்ந்ததை அச்சிறுமி, தந்தையிடம் தெரிவிக்கவே தந்தை, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இளைஞனை கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .