Sudharshini / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
'கர்ப்பிணிகளுக்கான போசாக்கு பொதிகள் வழங்குவதற்கான அறிவித்தல், காவத்தை பிரதேச செயலகத்திலிருந்து தமக்கு கிடைக்கவில்லை' என பன்னில்பத்து கூட்டுறவு விற்பனை நிலைய அதிகாரிகள் கூறினர்.
'காவத்தை தோட்டப் பகுதிகளிலுள்ள கர்ப்பிணிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக போசனைப் பொதிகள் வழங்கப்படவில்லை' என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வினவியபோதே கூட்டுறவு விற்பனை நிலைய அதிகாரிகள் இவ்வாறு கூறினர்.
காவத்தை பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் மேற்படி பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு மாதாந்தம்; போசனை பொதிகள், காவத்தை பன்னில்பத்து கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
'இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தமக்கான போசனை பொதிகள் வழங்கப்படவில்லை' என பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, 'போசாக்கு பொதிகளை கால தாமதமின்றி பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago