Gavitha / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
2.jpg)
-எஸ்.கணேசன், இலங்கா காமினி
ஹட்டன் - டிக்கோயா நகரசபை எல்லை பகுதிக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை பத்தனையில் கொட்டுவதால், இப்பகுதியில் காணப்படும் இயற்கை நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இப்பயணிகளின் வருகையும் குறைவடையும் என பத்தனை மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை எல்லை பகுதிக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை பத்தனை பகுதியில் கொட்ட வேண்டாம் என, பத்தனை பிரதேச பொதுமக்கள், பத்தனை நகரத்தில் இன்றுக் காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம், சுமார் 2 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதேச பொதுமக்கள் உள்ளிட்ட மதகுருமார்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக இடம் வழங்கப்பட்டு ஹட்டன் குப்பைகள், நுவரெலியா பிரதேச சபையின் எல்லை பகுதியில் சேகரித்து கொட்டப்படுகின்ற குப்பைகளால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் அதிகமாக வீசி வருவதுடன், நோய்களும் விரைவில் பரவுக்கூடிய நிலை உருவாகி இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை எல்லை பகுதிக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை தற்காலிகமாக நுவரெலியா பிரதேச சபையின் எல்லை பகுதியில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள், அண்மையில் எடுக்கப்பட்டன.
ஹட்டன் - குடாஓயா குப்பை கூளத்தில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பொதுமக்களால் செய்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்த குப்பைகள் நுவரெலியா பிரதேச கட்டுப்பாட்டு பகுதியான, பத்தனை பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
2 hours ago