2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது குளவிகள் தாக்கியதில் 15பேர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பசறை, லுணுகல, அடாவத்த தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது கலைந்து வந்த குளவிகள் கூட்டம் கொத்தியதில் பதினைந்து தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் லுனுகல அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி தோட்டத்தில் இவ்வாறான குளவிக் கொட்டுதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்தப்போதும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .