2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வலது குறைந்தோருக்கான 06 மாதகால சுயதொழில் பயிற்சி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தை சேர்ந்த வலது குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சி வழங்குவதற்கு மத்திய மாகாண சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 16-40 வயதிற்கு இடைப்பட்ட வலது குறைந்த ஆண் பெண் இரு பாலாரும் இவ் சுயதொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இங்கு ஆறு மாதகால பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் உணவு,  தங்குமிட வசதியுடன்,  பயிற்சி பெரும் காலத்தில் அவர்களுக்கான கொடுப்பணவு ஒன்றும் வழங்கப்படவுள்ளது.

பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்து வெளியேறுபவர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிப்பதற்காக 10000ம் ரூபாய் வரை இலகு கடன் வசதியும் செய்து கொடுக்கவுள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .