2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பேராதனை பல்கலை மாணவர் நால்வருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்தாகக் கூறி அப்பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது நீதவான் விசாரணையை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், மாணவர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X