Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் 2009ஆம் / 2011ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 4 ஆம் திகதிவரை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
முன்னைய பரீட்சைகளில் சித்தி பெறத் தவறியவர்களும் நூன சித்தி (ஒரு பாடத்தில் மட்டும் சித்தியின்மை) பெற்றவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பரீட்சை அனுமதி அட்டைகளை சம்பந்தப்பட்டவர்கள் கல்லூரியில் பெற்றுக்கொள்ள முடியும். பரீட்சைக்குத் தோற்றவுள்ள சகல பரீட்சார்த்திகளும் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 9 மணியளவில் கல்லூரிக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குறிப்பிட்டார்.
இவர்களுக்கான தங்குமிட, உணவு வசதிகள் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago