Janu / 2026 மே 19 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஒருவர், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியை சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே வீதி (ஒழுங்கை) எல்லை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய, பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து, சமாதானப்படுத்த முயன்றனர். இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்து, சமாதானமாக போவதாக ஒப்புக்கொண்ட தருணத்தில், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த குறித்த நபர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு. கஜிந்தன்
36 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
1 hours ago