2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மோதலினால் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை - மஹாதென்ன தோட்ட கோவியிலில் இடம்பெற்ற பூஜை ஒன்றில் கலந்துகொண்ட இரு கோஷ்டியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலினால் ஆறு பேர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக உறவினர்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாள் வெட்டுகளாலும் தடிகளால் தாக்கியதாலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்கள் காயமடைந்தவர்கள் இடையேயும் இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  மெற்கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலநாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X