Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
ஹட்டன் டிக்கோயா ஆற்றை ஆழமாக அகலப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் இந்த ஆற்றை அகலப்படுத்துவதன் மூலம் அலுத்கம, அம்மன்புரம் ஆகிய கிராம மக்களும் டிக்கோயா தோட்ட மக்களும் பெரும் நன்மையடைவரென ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தில் அடை மழை பெய்கின்ற காலங்களில் டிக்கோயா ஆறு பெருக்கெடுக்கிறது. இதனால், அலுத்கம மற்றும் அம்மன்புரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இது தொடர்பில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இடர்முகாமைத்துவ அமைச்சு இதற்காக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் இந்த ஆற்றை ஆழமாக அகலப்படுத்தும்; பணிகள் தற்போது இடம்பெற்று வருதாக ஹட்டன் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago