2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

1,000 ரூபாய்க்கு இணக்கம்

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளாந்த சம்பளமாக, 1,000 ரூபாயை வழங்குவதற்கு, சம்பள நிர்ணய சபையுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில், 900 ரூபாயை அடிப்படை சம்பளமாகவும் 100 ரூபாயையு பட்ஜெட்  கொடுப்பனவாகவும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழில்  அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தரப்பில், 8 பேரும் பெருந்தோட்டக் கம்பனிகள் தரப்பில் 8 பேரும் அரசாங்கத் தரப்பில் 3 பேரும் என, மொத்தம் 19 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்களின் பிரதநிதிகள் முன்வைத்த அழுத்தம், கோரிக்கைகளை சம்பள நிர்ணைய  சபை ஏற்றுக்கொண்டதாகவும் கம்பனிகள் தரப்பில் வாதங்கள் ஏற்பட்ட போதிலும் இறுதியில் ஏகமான முடிவு எட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆட்சேபனை மனுக்கள் தொடர்பில், வாக்கெடுப்புக்கள் இன்றி, சம்பள நிர்ணைய சபை, 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .