Freelancer / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, ஏத்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே, செவ்வாய்க்கிழமை (12) இரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில் இருந்து, கம்பளை ,ஜயமாலபுர பகுதிக்கு போதை மாத்திரைகளை எடுத்துவந்த வேளையிலேயே, ஏத்கால பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க கெக்குலந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, வைத்தியருக்குரிய அடையாள சின்னத்துடன் அவர் பயணித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என தெரிவித்த கம்பளை ஏத்கால பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago