2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது

Editorial   / 2026 ஜனவரி 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான   ஒப்பந்தம்  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து வெள்ளிக்கிழமை (30) காலை கைச்சாத்தானது .

2026 வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது 1,350 ரூபாவாக நிலவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 400 ரூபாய் அதிகரிப்பில் 200 ரூபாவினை அந்தந்த பிராந்திய தோட்ட நிறுவனங்களும், எஞ்சிய 200 ரூபாவினை அரசாங்கமும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X