2026 மே 07, வியாழக்கிழமை

10 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசலக்கூடங்கள் அமைக்க நிதி

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 10 ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை சுகாதார வசதிகளைக் கவனத்தில் கொண்டு, மலசலக்கூட வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக, தலா 45 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக, சுகாதார சுதேச வைத்திய சேவைகள் மற்றும் மகளிர் சிறுவர் சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது பொது நடமாடும் சேவை, எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுபோன்ற நடமாடும் சேவை, இரத்தினபுரி பிரதேசத்தின் பல இடங்களிலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான ஆரம்பப் பணிகளுக்காக மாத்திரம், 75 மில்லியன் ருபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கட்டட நிர்மாணங்களுக்காக, 1.5 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொலன்ன அரச வைத்தியசாலை, முழுமையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .