2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

100 நாட்களைக் கடந்த போராட்ட களம் அகற்றப்பட்டது

R.Maheshwary   / 2022 ஜூலை 24 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- ஜோர்ஜ் ஈ.த. சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த கோட்டா கோ கம பேராட்டக் களமானது, அகற்றப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக் களத்தை உருவாக்கியவர்களே அதனை அகற்றியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், போராட்ட களத்தை அகற்றுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்ட கள செயற்பாட்டாளரான திமுது அபேகோன் கருத்து தெரிவிக்கையில், தற்காலிகமாக இந்த களத்தை அகற்றியுள்ளதாகவும் எதிர்காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் மக்கள் எதிர்ப்பு ஆட்சியை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான போராட்ட களமொன்று உருவாக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X