Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4,000 தனி வீடமைப்புத் வேலைத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் (09) காலை, பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தில் இடம்பெற்றது.
மலைநாட்டுப் புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் இந்த வைபவத்தில், வேவெஸ்ஸ தோட்டத்தில் 50 வீடுகளுக்கும் தெல்பெத்த தோட்டத்தில் 50 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்தரதீபன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ராஜமாணிக்கம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்திய நிதி உதவியின் கீழ், இந்தப் புதிய வீடுகள், ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago