2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவத்திலிருந்து  தப்பியோடிய இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய இச்சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கூட்டிச் சென்று இப்பாலியல் துஷ்பிரயோகத்தினை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர், அச்சிறுமி சுய விருப்பத்துடனேயே தன்னுடன் வந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் 18 வயதுக்கு குறைந்ந எவரும் சிறுவர்களாகவே கருதப்படுவதனால் சுயவிருப்பத்துடன் சென்றிருந்தாகவும் சட்டரீதியாக பெரும் குற்றமென பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்திகாரி எஸ்.பீ.தியகெலினாவல குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சாரானாத் சமரகோன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X