Kogilavani / 2021 மே 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருண் சான்
கேகாலை புளத்கொஹுப்பிடிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட களுப்பான தோட்டத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
இந்த அனர்த்தம் இடம்பெற்று நேற்றுடன் (17) ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், பிரதேச மக்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு, பொது சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தோட்டத்தில் நடைபெற்றது.
மேற்படி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில், உயிரழந்தவர்களின் குடும்பத்தின் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவக் கூறுமுகமாக ஒவ்வொரு வருடமும் அன்னதான நிகழ்வு நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக இம்முறை அந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


11 minute ago
31 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
50 minute ago
2 hours ago