Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்க கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் திங்கட்கிழமை (08) காலை ஈடுப்பட்டனர்.
1700 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை வழங்க கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று இடைக்கால தடை உத்தரவையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இம்மாதம் சம்பளத்தில் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேநேரத்தில் "1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் தமக்கு அது பற்றி பிரச்சனை இல்லை எனவும் ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பொறுத்தவரைக்கும், கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த 1700 ரூபாய் சம்பளமானது மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வராது என்று.
நான் மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை தளர விட வேண்டாம் என்று ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் சொன்னதை கட்டாயம் செய்வோம்.
இன்றைக்கு அரசாங்கமாக இருக்கட்டும், தொழிற்சங்கங்களாக இருக்கட்டும் அனைவருமே முழு முயற்சியுடன் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். மக்களும் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
என்னை பொறுத்த வரைக்கும் இன்றில் இருந்து மக்கள் அவர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுவார்கள்.
அதாவது ஒவ்வொரு தோட்டத்திலும் வெளிக்காட்டுவார்கள். அவர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.
நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஒரு மணி நேரம் அடையாள பணி பகிஷ்கரிப்பில் முதற் கட்டமாக ஈடுப்பட்டு பின் வழமையான தொழிலுக்கு சென்றனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago