Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மஸ்கெலியா பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு நோயாளர் ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த ஆறு பேருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு மேலும் 21 பேருக்கெதிராக குறுகிய கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார பரிசோதகரும் நுவரெலியா மாவட்ட சுகாதார கல்வியதிகாரியுமான பி.ஏ.பாஸ்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :-
ஜனாதிபதி செயலகத்தின் டெங்கு ஒழிப்பு செயலணியின் ஆலோசனைக்கேற்ப ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள 48 தோட்டங்களில் கிராம சேவகர்கள், பொலிஸார், பொதுசுகாதார உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், தோட்ட சுகாதார உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைத்தொடர்பில் சுகாதாரத்தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றும் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கையின் போது மஸ்கெலியா, நோர்வூட், லொயினோன், கொட்டியாக்கலை போன்ற பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேர் இனங்காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
அத்துடன் மேலும் 21பேருக்கு எதிராக குறுகிய கால எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கெதிராக 2008 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க நுளம்பு பெருக்கத்தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .