2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புசல்லாவை கந்தலா கீழ்ப் பிரிவில் மின்சார விநியோகம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

புசல்லாவை கந்தலா கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சார இணைப்பு வழங்கப்பட்டதாக இ.தொ.கா.வின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஷ் தெரிவித்தார்.

இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்தின் 33 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட இந்த  மின்சார இணைப்பினால் 150 தொழிலாளர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இன்று இடம்பெற்ற திறப்புவிழா நிகழ்வில் இ.தொ.கா.வின் உதவிச் செயலாளர் எஸ்.செல்லமுத்துவும் கலந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X